நான்கு தமிழக எம்பிக்களின் பதவியை பறிக்க பாஜக திட்டம்!

மே 26, 2019 1630

புதுடெல்லி (26 மே 2019): தமிழகத்தில் நான்கு எம்பிக்களின் பதவியை பறிக்க பாஜக வியூகம் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவை தேர்தலில், தேனி தவிற அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் தொகுதி தேர்தல் நிறுத்தி வைக்கப் பட்டது.

இந்நிலையில் ஊழல் வழக்கு உள்ள நான்கு எம்பிக்களின் வழக்கை மீண்டும் தோண்டி எடுக்க பாஜக திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுகிறது. ஒருவர் தவிர அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டு விட்டாலும், மீண்டும் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் மீது உள்ள ஊழல் வழக்கை நோண்டி எடுத்து நால்வரின் பதவியை பறிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறதாம்.

இந்தியா முழுவதும் காங்கிரஸ்தான் வெல்லும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில் பாஜக எதிர் பாராத விதமாக அதிக இடங்களை கைபற்றியது பொதுமக்களுக்கே ஆச்சர்யம்தான்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...