எடப்பாடி பதவியை பறிக்க ஓ.பி.எஸ் பலே திட்டம்!

மே 26, 2019 483

சென்னை (26 மே 2019): எடப்பாடி பழனிச்சாமியின் முதல்வர் பதவிக்கு ஓ.பிஎஸ் ஆப்பு வைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாண்டு காலமாக தனது பதவியை தக்கவைத்துள்ள எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை பெறுவதில் வெற்றி பெற்றிருக்கிறார். எனினும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகக் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் தொகுதி உட்பட கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளை அதிமுக பறிகொடுத்துள்ளது.

அதேநேரத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் அதிமுக தனது வெற்றியை உறுதிசெய்துள்ளது. எனவே சொந்த சமுதாயத்தினரிடமே எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கை இழந்துவிட்டார் என்பதையும், தன்னுடைய பகுதியில் தனக்கான செல்வாக்கு வலுவாக இருப்பதாகவும், மக்கள் ஈபிஎஸ் தலைமையைவிட தனது தலைமையையே மக்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டி, பாஜக தலைவர்களுக்கு ஓபிஎஸ் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என் எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இல்லையேல் முதல்வர் பதவியையாவது தட்டிப் பறிக்க முயன்று வருகிறார் ஓபிஎஸ் .அண்மையில் அவரும் அவரது மகனும் வரணாசிக்கு சென்று பிரதமர் மோடியின் பேரணியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...