இருதரப்பினரிடையே பிரச்சனை - பள்ளிவாசலுக்கு பூட்டு!

மே 26, 2019 663

கோவில்பட்டி (26 மே 2019): கோவில்பட்டி அருகே தொழுகை நடத்துவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் நீதிமன்றம் பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டுள்ளது.

கோவில்பட்டி அருகே பாண்டவர் மங்கலத்தில் உள்ள மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதில் இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. ரமலான் மாதத்தில் பிரச்சனை வேண்டாம் என்று இரு தரப்பினரிடையேயும், உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் வீர கதிரவன் தலைமையில் ஜெய இந்திரா பட்டேல், ஜின்னா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால். நீதிமன்றம் நியமித்த குழுவினர் போலீசார் முன்னிலையில் பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டனர்.

இதற்கிடையே இருதரப்பினரிடையேயும் சமாதானம் ஏற்பட்டால் ரம்ஜான் மாதத்திலாவது பள்ளிவாசலை திறக்க குழுவினர் தயாராக உள்ளதாக குழுவின் தலைவர் வீர கதிரவன் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...