கையை துண்டாக வெட்டி நெல்லையில் பணம் கொள்ளை!

மே 28, 2019 268

நெல்லை (28 மே 2019): நெல்லையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை மறித்து கையை துண்டாக வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரை சேர்ந்த ராஜபிரபு என்பவர், சங்கரன்கோவில், ராஜபாளையம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார்.

இவர் நேற்று நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பல்பொருள் அங்காடியில் பணத்தை வசூலித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது புதிய பேருந்து நிலையம் அருகே ராஜபிரபுவை வழிமறித்த கும்பல், அவரது கையை வெட்டி துண்டாக்கிவிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதில் கையை இழந்த ராஜபிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்களின் இந்த அட்டூழியத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...