மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு மூன்று இடம்?

மே 29, 2019 853

புதுடெல்லி (29 மே 2019): நாளை பதவியேற்கும் மத்திய அமைச்சரவையில் தமிழகத்தில் இருந்து மூன்று அமைச்சர்கள்

பதவியேற்கலாம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை கைபற்றியுள்ள நிலையில் பிரதமராக மோடி நாளை மீண்டும் பதவியேற்கிறார். அவருடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்கின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று 3 மணிநேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், 6 கட்சிகளுக்கு மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்கப் போவதாக மோடி, அமித் ஷா முடிவுசெய்துள்ளனர். பஞ்சாபிலிருந்து ஷிரோன்மணி அகாலிதள், உத்தரப்பிரதேசத்திலிருந்து அப்னாதள் என்ற கட்சி, பீகாரில் நிதிஷ்குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், பீகாரிலிருந்து மற்றுமொரு கட்சியான லோக் ஜனசக்தி, மகாராஷ்டிராவிலிருந்து சிவசேனா, தமிழகத்திலிருந்து அ.தி.மு.க என்று 6 கட்சிகளுக்கு ஆட்சி அமைக்கப்போகும் பா.ஜ.க-வின் அமைச்சரவையில் இடம்பிடிக்கப்போகின்றன. இதில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒன்று முதல் மூன்று இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகத்திலிருந்து மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...