மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் திமுக எம்.பிக்கள்!

மே 30, 2019 377

புதுடெல்லி (30 மே 2019): ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததை அடுத்து திமுக எம்பிக்கள் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தயார் நிலையில் உள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், நடிகர் நடிகைகள் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை. ரஜினி இவ்விழாவில் கலந்து கொள்கிறார்.

இதனை அடுத்து ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப் படாததால் திமுக எம்பிக்கள் இவ்விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...