தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

ஜூன் 01, 2019 338

சென்னை (01 ஜூன் 2019): தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லா மண்டபம் அகதிகள் முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு அதிகாரியாக தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில குற்ற ஆவண காப்பக டிஜிபியாக கரண் சின்ஹாவும், கும்பகோணம் போக்குவரத்து கழக கண்காணிப்பு அதிகாரியாக ஜாங்கிட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...