டிக்டாக் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்!

ஜூன் 01, 2019 679

கோவை (01 மே 2019): டிக்டாக்கில் பலவிதமான வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்ட மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ், இவரது மனைவி நந்தினி. இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நந்தினி அதிகமாக டிக்-டாக் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், நந்தினி பணிபுரியும் கல்லூரிக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியை குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் டிக்டாக் பதிவுதான் நந்தினி கொலைக்கு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...