கோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி உத்தரவு!

ஜூன் 03, 2019 199

சென்னை (03 ஜூன் 2019): கோயில் பணியாளர்களுக்கான குடும்பநல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில், நிரந்தர கோயில் பணியாளர்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும், குடும்பநல நிதி உதவி 1 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களிடமிருந்து தற்போது வசூலிக்கப்படும் மாதாந்திர சந்தா தொகை 15 ரூபாயில் இருந்து, 60 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கவும் துறை ஆணையருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...