ராமநாதபுரம் தொகுதி மக்களுக்கு நவாஸ் கனி எம்.பி கோரிக்கை!

ஜூன் 03, 2019 910

ராமநாதபுரம் (03 ஜூன் 2019): ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இ.யூ முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தொகுதி மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அன்பிற்கினிய நண்பர்களே,

நம்முடைய இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காலம் காலமாக தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதனை தீர்ப்பதாக என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தேன். அதற்கேற்ப, நம்முடைய மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க ஆலோசித்து வருகிறோம். பராமரிக்காமல் விடப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், நரிப்பையூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இதுபோன்ற திட்டங்களை மீண்டும் செயல்படுத்த தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றேன். இதனைத் தாண்டி நம் மாவட்டத்தில் உள்ள அனுபவசாலிகள், படித்த இளைஞர்கள் பொறியியலாளர்கள், உங்கள் அனைவரின் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.

இது நம்முடைய சொந்த மண் இதனை நாம்தான் முன்னேற்ற வேண்டும். இதன் பிரச்சனைகளை நாம் ஒன்றிணைந்து தீர்க்க முயற்சி செய்வோம்.

இதற்கு என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன். என்னுடைய இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குட்பட்டு நம் மாவட்டத்தின் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் சிறப்புறச் செய்வேன்.

அதற்காக உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மேலதிக விவரங்களுக்கு 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...