சென்னையில் இளைஞர்கள் பைக் ரேஸை தடுக்க நடவடிக்கை!

ஜூன் 03, 2019 234

சென்னை (03 ஜூன் 2019): சென்னையில் பைக் ரேஸை தடுக்க போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுபடுபவர்களை கட்டுப்படுத்த, காமராஜர் சாலையில் 29 இடங்களில் சோதனை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சோதனை தடுப்புகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் சாலை விதிகளை மீறியதாக நேற்று மட்டும் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தகுதி நீக்கம் செய்யவும் போக்குவரத்து போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...