தமிழகத்தை கலக்கும் அரசு ஊழியரின் ஆபாச வீடியோ!

ஜூன் 04, 2019 1435

பரமக்குடி (04 ஜூன் 2019): பெண் ஒருவருடன் அரசு ஊழியர் அசிங்கமாக நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பரமக்குடி அருகே சத்திரக்குடியில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்ப்பவர்தான் அந்த பெரிய மனுஷன்.. பெயர் நாகராஜ், வயது 50. இவர் மின்பாதை ஆய்வாளர் வேலையில் உள்ளார். இவர் ஆபீசில் இருக்கும் போது, ஒரு துப்புரவு பெண் ஊழியர், பெருக்கி சுத்தப்படுத்த வருகிறார். ஆனால் அதற்கு முன்பேயே அந்த ஆபீசில் நாகராஜ் ஆஜராகி இருக்கிறார். இன்னொரு ஊழியரும் வந்துள்ளார்.

ஏதோ வேலையில் ரொம்ப அக்கறை எல்லாம் இல்லை.. எல்லாம் அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபடத்தான். அந்த பெண்ணின் அருகில் சென்று முதலில் இடுப்பை பிடித்து கொள்கிறார் நாகராஜ், அதற்கு பிறகு கட்டிப்பிடிக்கிறார். இதை இன்னொரு ஊழியரை வீடியோ எடுக்க சொல்கிறார். அந்த ஊழியரும் இந்த கண்றாவியை செல்போனில் படம் பிடிக்கிறார்.

நாகராஜின் பிடியில் இருந்த அந்த பெண், “விடு என்னை.. விடு என்னை..” என்று சொல்கிறார். ஆனாலும் நாகராஜ் விடவில்லை.. திரும்ப திரும்ப கட்டிப்பிடிக்கிறார். ஒவ்வொரு முறை கட்டிப்பிடிக்கும்போதும் “போட்டோ எடுய்யா.. போட்டோ எடுய்யா” என்று நாகராஜ் சொல்ல, அந்த பெண்ணோ போட்டோவும் “வேணாம், ஒரு மசுரும் வேணாம்.. அசிங்கமா கேட்டுட போறேன்” என்று சொல்கிறார். “போட்டோ எடுத்தாச்சு” என்று மற்றொரு ஊழியர் சொல்லவும், திரும்பவும் போய் அந்த பெண்ணை பின்புறமிருந்து அலேக்காக கட்டிக் கொள்கிறார் நாகராஜ்.

இந்த வீடியோ எப்போது எடுத்தது என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...