பச்ச மண்ணையே அரசியல் பேச வச்சுட்டீங்களே - ஏ.ஆர்.ரஹ்மானை கொண்டாடும் தமிழர்கள்!

ஜூன் 05, 2019 486

சென்னை (04 ஜூன் 2019): பாஜக ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக புதியக் கல்விக்கொள்கை வரைவில் மும்மொழிக்கொள்கையை அறிவித்தது. அதில் இந்தி பேசாத மாநிலங்களில் கூட இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து அந்த வரைவு திட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. அப்போது ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அழகிய திருத்தம்' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தற்போது மீண்டும் ரஹ்மான் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அது என்ன என்றால் ‘அட்டானமஸ்' என்னும் ஆங்கில வார்த்தைக்கு கேம்பிரிஜ் அகராதியில் என்ன பொருள் என்பதை பகிர்ந்துள்ளார். அட்டானமஸுக்கு தமிழில் தன்னாட்சி என்பது பொருள். ரகுமான் மத்திய அரசை கண்டிக்கும் விதமாகதான் இவ்வாறு செய்துள்ளார் என்று அந்த பதிவுக்கு கமெண்ட் செய்யும் பலரும் தெரிவித்துள்ளனர்.இந்த ட்வீட் காலையில் இருந்தே ட்ரெண்டிங்கில் உள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...