நீட் தேர்வு தோல்வி எதிரொலி - தமிழக மாணவிகள் தற்கொலை!

ஜூன் 05, 2019 279

சென்னை (05 ஜூன் 2019): தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில், திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ பிளஸ்2-வில் 490 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நீட் தேர்வை எழுதினார். இன்று வெளியான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால், அவருடைய பெற்றோர்கள் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதே போல, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...