நீட் தேர்வில் தோல்வி அடைந்த பட்டுக்கோட்டை மாணவி தற்கொலை!

ஜூன் 05, 2019 345

பட்டுக்கோட்டை (05 ஜூன் 2019): நீட் தேர்வில் தோல்வி அடைந்த பட்டுக் கோட்டை மணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி 685 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 57-வது இடமும், மாநில அளவில் முதலிடமும் பிடித்துள்ளார்.

இது இப்படி இருக்க தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ பிளஸ்2-வில் 490 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நீட் தேர்வை எழுதினார். இன்று வெளியான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவ்விருவரின் தற்கொலை தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...