போட்ட ட்வீட்டை நீக்கினார் எடப்பாடி!

ஜூன் 05, 2019 333

சென்னை (05 ஜூன் 2019): தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் விருப்பமொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில், ஆங்கிலத்துடன், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, ‘இது வரைவு கொள்கைத்தான். இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய மொழிகளை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம். எந்த மொழியையும் திணிப்பது நோக்கம் அல்ல,’ என் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூறினர். இதனை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி தேசிய கல்வி கொள்கை வரைவு திருத்தப்பட்டு நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், இந்தி கட்டாயம் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டுள்ளது. ‘வாரிய தேர்வுகளில் ஒவ்வொரு மொழியின் அடிப்படை புலமை சோதிக்கப்படும். அதனால், 6ம் வகுப்பு முதல் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் ஆதரவுடன் தேர்வு செய்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்மொழி பிறமாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக மாணவர்கள் கற்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலமாக உலக மொழிகளிலேயே இருக்கக்கூடிய தமிழ் மொழியை அங்கீகரிக்கக்க்கூடிய ஒரு விதமாக அமையும், என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் விடுத்த வேண்டுகோள்ளை நீக்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...