நீட் தேர்வு தோல்வி - இரண்டு நாளில் மூன்று மாணவிகள் தற்கொலை!

ஜூன் 06, 2019 318

விழுப்புரம் (06 ஜூன் 2019): நீட் தேர்வு தோல்விக்கு விழுப்புரத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி காலமானதையடுத்து தனக்கு உள்ள ஒரே மகளான 18 வயதான மோனிஷாவை படிக்க வைத்து வந்துள்ளார். தாயில்லாத மகளுக்கு மருத்துவக் கனவு இருந்ததால் அவரை நீட் தேர்வுக்கு தயாராக அதற்கான தனியார் பயிற்சி மையத்திலும் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவு வெளியானதில் தான் தோல்வி அடைந்ததால், தற்கொலை செய்து கொள்வதாகவும், இதற்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மரக்காணம் காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மோனிஷா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு தோல்வியால் திருப்பூர், பட்டுக் கோட்டை மாணவிகள் இருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் விழுப்புரத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...