அசால்ட்டாய் வந்து செல்ஃபோன் திருடியவனை அலேக்காக தூக்கிய போலீஸ்!

ஜூன் 07, 2019 341

சென்னை (07 ஜூன் 2019): சென்னையில் டிப்டாப் உடையணிந்து தனது மனைவியுடன் செல்போன் கடைகளுக்கு சென்று விலையுர்ந்த செல்போன்களை திருடியவன் கைது செய்யப்பட்டான்.

நெற்குன்றத்தைச் சேர்ந்த 28 வயதான ஆருண், தனது மனைவியுடன் செல்போன் வாங்குவது போல் அப்பகுதியில் உள்ள விற்பனையகங்களுக்கு சென்று செல்போனை வாங்கி பார்ப்பான். ஊழியர் மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது விலை உயர்ந்த செல்போன்களை திருடியுள்ளான். சிசிடிவி காட்சி உதவியுடன் அவனை கைது செய்துள்ள போலீசார், 5 விலையுர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ஆரூணின் மனைவிக்கு நேரடி தொடர்பில்லை என்பதால் அவரை கைது செய்யவில்லை என அரும்பாக்கம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...