அரசு பேருந்தை இயக்க பக்தர்கள் கோரிக்கை!

ஜூன் 08, 2019 372

சுரண்டை (08 ஜூன் 2019): சுரண்டை - இருக்கன்குடிக்கு நிறுத்தப்பட்ட அரசு பஸ்ஸை இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை, வீகேபுதூர், சாம்பவர்வடகரை, சேர்ந்தமரம், வீரசிகாமணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆன்மீக தலமான இருக்கன்குடிக்கு ஒவ்வொரு வாரமும் சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக அனைத்து பகுதிகளிலும் இருந்தும் தனியார் வாகனங்கள் பெருமளவில் இயங்கப்பட்டன.

இந்நிலையில் சுரண்டையிலிருந்து இருக்கன்குடிக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை அடிப்படையில் சுரண்டையிலிருந்து வெள்ளாளன்குளம், மேல்கலங்கல், உள்ளிட்ட கிராம புற பகுதி வழியாக சங்கரன்கோவில் டெப்போ பஸ் இருக்கன்குடிக்கும். அப்போதைய ஆலங்குளம் எம்எல்ஏ பிஜி. ராஜேந்திரன் ஏற்ப்பாட்டின் படி கடையத்திலிருந்து, பாவூர்சத்திரம், சுரண்டை, சங்கரன்கோவில், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக இருக்கன்குடி க்கு தென்காசி டெப்போ பஸ்ஸூம் பயணிகள் அடர்வுடன் நல்ல வசூலில் இயக்கப்பட்டு வந்தன.

இந்த பஸ்ஸின் மூலம் இருக்கன்குடி செல்லும் பக்தர்கள் மட்டுமல்லாமல் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளுக்கு செல்லும் விவசாயிகள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் அரசு அதிகாரிகள் பயனடைந்து வந்தனர். இப் பஸ்ஸில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை 5 மணிக்கு புறப்படும் வகையில் இயங்காமல் காலை ஓரு வழி பயணத்திற்கு மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் சாமி கும்பிட்டு விட்டு ஊருக்கு திரும்ப இரண்டு, மூன்று பஸ்கள் மாறி சிரமப்பட்டு வந்தனர். ஆகவே இருக்கன்குடி இருந்து சுரண்டைக்கு மாலை நேர பஸ் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடையத்திலிருந்து சுரண்டை வழியாக இருக்கன்குடி சென்று காலை நேர பஸ்ஸூம் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பக்தர்கள் மீண்டும் தனியார் வாகனங்களுக்கு செல்லும் நிலை மட்டுமல்லாமல் தினசரி பயணிக்கும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆகவே கடையத்திலிருந்து சுரண்டை வழியாக இருக்கன்குடி சென்ற பஸ்ஸை மீண்டும் இயக்குவது டன் இருக்கன்குடி இருந்து மாலை 5 மணிக்கு சுரண்டை திரும்பும் வகையில் உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...