பாஜக - அதிமுக கூட்டணியில் விரிசல் - அமைச்சர் சண்முகம் போர்க்கொடி!

ஜூன் 09, 2019 787

விழுப்புரம் (09 ஜூன் 2019): சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேசிய பேச்சு அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விழுப்புரம் மாவட்டம், வானுார் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம், நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சண்முகம், "மக்கள் மிக தெளிவாக உள்ளனர். இந்த தேர்தலிலும் அது பிரதிபலித்துள்ளது. மக்கள் அளித்த எச்சரிக்கையாக, தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.

அதே நேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தான், அ.தி.மு.க.,விற்கு வர வேண்டிய, சிறுபான்மையினர் ஓட்டுகள், கிடைக்காமல் போனது; அதனால் தான், தேர்தலில் தோல்வியடைந்தோம். தமிழகத்தில், 'நீட், ஜி.எஸ்.டி., - ஹைட்ரோ கார்பன்' உள்ளிட்ட அனைத்தும், மத்தியில் காங்., - தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, ஒப்புதல் பெறப்பட்டது. இவற்றை, தற்போது, பா.ஜ., தொடர்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

ஏற்கனவே அதிமுகவில் உள்ள இரு தலைமைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...