அதிமுக உட்கட்சி பூசல் குறித்து ஜவாஹிருல்லா கருத்து!

ஜூன் 10, 2019 435

மதுரை (09 ஜூன் 2019): அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் குறித்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா அதிமுகவில் உள்ள இரட்டை தலைமை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், ஒரே தலமையின் கீழ் அதிமுக இயங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதே கருத்தை வேறு சிலரும் கட்சியில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஜவாஹிருல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் தெரிவித்தாவது:

ஒரு கட்சிக்கு 2 தலைமை இருப்பது அந்த கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லாது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. அணுக்கழிவு மையம் அமைக்க முயற்சிப்பது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூன் 12-ல் நடைபெறும் போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...