முன்னாள் திமுக முதல்வர் மரணம்!

ஜூன் 10, 2019 315

புதுச்சேரி (10 ஜூன் 2019): புதுவை முன்னாள் திமுக முதல்வர் ஆர்.வீ.ஜானகிராமன் காலமானார்.

78 வயதான ஆர்.வீ.ஜானகிராமன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.வீ.ஜானகிராமன் அவர்கள் கடந்த 1996ஆம் ஆண்டு மே 26 முதல் 1999ஆம் ஆண்டு
மார்ச் 18 வரை புதுச்சேரி முதல்வராக பதவி வகித்தவர் என்பதும், இவர் புதுவையின் நெல்லித்தோப்பு என்ற தொகுதியில் இருந்து 1985 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆர்.வீ.ஜானகிராமன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 2.30 மணிக்கு அவர் காலமானார். மறைந்த ஆர்.வீ.ஜானகிராமன் உடல் நாளை காலை 10.30 மணிக்கு மரக்காணம் ஆலந்தூர் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...