உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவியா?

ஜூன் 11, 2019 231

திருச்சி (11 ஜூன் 2019): நடிகரும் திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு திமுகவில் முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், உதயநிதிக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளன.

ஆனால் கட்சியில் பதவிக்காக நான் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை திமுகவின் அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...