தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் விலகல்!

ஜூன் 11, 2019 162

தூத்துக்குடி (11 ஜூன் 2019): தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென வழக்கில் இருந்து விலகியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் பட்டியலிட்டிருந்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு பிறப்பித்திருப்பதால் தற்போது இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றவும் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி சசிதரன் பரிந்துரை செய்துள்ளார்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...