அதிமுகவில் இணைந்தார் ராதாரவி!

ஜூன் 12, 2019 291

சென்னை (12 ஜுன் 2019): திமுகவில் இருந்து நீக்கம் செய்யப் பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நயன்தாராவின் கொலையுதிர்காலம் பட விழாவில் பேசிய ராதாரவி, “நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார்.

நடிகர் ராதாரவியின் இந்தப் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...