சசிகலா விடுதலையானால் இதுதான் நடக்கும்!

ஜூன் 12, 2019 504

சென்னை (12 ஜூன் 2019): சசிகலா விரைவில் விடுதலை செய்யப் படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் தலைமையில் அதிமுக இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்று அதிமுக கூட்டத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அல்லது இரட்டை தலைமை வேண்டுமா என்று விவாதிக்கப்பட்டு இறுதியில் தற்போது நடைமுறையே பின்பற்றலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சசிகலா தலைமையின் கீழ் அதிமுக வந்தால் மட்டுமே அதிமுக வலிமையான கட்சியாக வர வாய்ப்பிருக்கிறது என்று பாஜக கூறியதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே சசிகலா விரைவில் விடுதலை செய்யப் படலாம் என்றும் அதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது அதிமுக தொண்டர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை என்றும், அது விரைவில் பூதாகரமாக வெடிக்கும் என்றும் அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இன்று கூடிய அதிமுக கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து மட்டுமே விவாதிக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...