பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி!

ஜூன் 12, 2019 333

சென்னை (12 ஜூன் 2019): தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, பன்வாரிலால் புரோகித் தமிழகம் திரும்பினார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி ராஜ்பவனில் இன்று மாலை சந்தித்துப் பேசினார். அப்போது, டி.ஜி.பி. நியமனம், தலைமைச் செயலாளர் நியமனம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே அதிமுகவில் உள்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிமுக ஒரு தலைமையின் கீழ் இயங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...