திமுக எம்.எல்.ஏ ராதாமணி மரணம்!

ஜூன் 14, 2019 179

விழுப்புரம் (14 ஜுன் 2019): விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார். அவருக்கு வயது 67.

விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கு.ராதாமணி (வயது 67). திருமணம் செய்துகொள்ளாத இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். இவர் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராதாமணி 2016 சட்டசபை தேர்தலில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...