அடுத்தடுத்து திமுகவுக்கு அதிர்ச்சி!

ஜூன் 14, 2019 593

சென்னை (14 ஜூன் 2019): திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார் .

தி.மு.க தலைவர் கலைஞருக்கு மிக நெருக்கமானவராக இருந்த சிவசுப்பிரமணியன் 1998 _ 2004 ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும்,1989ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971_ 1976 ஆண்டிலும் 1986_1990, ஆண்டிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது தி.மு.க.வில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர். மறைந்த சிவசுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரான ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ ராதாமணியும் காலமான நிலையில் திமுக முன்னாள் எம்பி காலமான சம்பவம் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...