சென்னை ரெயில் நிலையத்தில் மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

ஜூன் 15, 2019 443

சென்னை (15 ஜூன் 2019): சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தேன்மொழி என்பவரும் அதே ஊரைச் சேர்ந்த சுரேந்தர் எனவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தேன்மொழியின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேன்மொழி சுரேந்தரை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. தேன்மொழி சென்னையில் விடுதி ஒன்றில் தங்கி தட்டச்சு பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று தேன்மொழி சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது அங்கே வந்த சுரேந்தர், தேன்மொழியிடம் பேசியுள்ளார். ஆனால் எதற்கும் தேன்மொழி சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர், தேன்மொழியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார், மேலும் சுரேந்தர், அபோது அங்கு வந்த ரெயிலில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருவரையும் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடன் படுகாயங்களுடன் இருந்த இருவரையும் அங்கிருந்தவர்களால் ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன்பு சென்னை நுங்கம் பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த ஸ்வாதி படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்னொரு சம்பவம் சென்னையில் சேத்துப் பட்டு ரெயில் நிலையத்தில் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...