தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுகவே காரணம் - கனிமொழி குற்றச்சாட்டு!

ஜூன் 16, 2019 249

சென்னை (16 ஜூன் 2019): தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு காணாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ளவில்லை என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.

கடல் நீரை குடிநீராக்கு திட்டத்தை தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்தால் அதனை தற்போதைய அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.

நீர் நிலைகளை துர்வாராமல், பராமரிக்காமல் போனதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முழு காரணம் என கனிமொழி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...