சினர்ஜியின் தலைமை அலுவலக திறப்பு விழா - ஜவாஹிருல்லா திறந்து வைப்பு!

ஜூன் 16, 2019 427

சென்னை (16 ஜூன் 2019): சினர்ஜி இண்டர்நேஷனல் குழுமத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழா 14.06.2019 அன்று சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிட்கோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.

தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சினர்ஜி இண்டர்நேஷனல் குழும்பத்தின் நிறுவன இயக்குனர் பொறியாளர் கீழை இர்பான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உளவியல் நிபுணர் முனைவர் M.ஹுசைன் பாஷா அவர்கள் குழுமத்தின் செயல் திட்டங்களை எடுத்துரைத்தார். மார்க்க அறிஞர் மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

S.N.சுல்தான், பொறியாளர் ரபீக் ஜக்கரியா, நரம்பியல் நிபுணர் டாக்டர் சலாஹுதீன், தாஹா நவீன், கீழை ஹஸன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...