கொளுத்தும் வெயில் - தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!

ஜூன் 17, 2019 293

சென்னை (17 ஜூன் 2019): அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் வெப்ப அலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை காலத்திற்கு முன்பே ஆரம்பித்த வெயில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் இப்போதும் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. அதிகமான வெப்பத்தால் தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து செய்திக் குறிப்பில் ‘திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய சில வட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். அதனால் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து சன் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்கவும்’ என அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...