ரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த இரண்டு பிரவுசிங் சென்டர்களுக்கு அபராதம்!

ஜூன் 18, 2019 231

தஞ்சாவூர் (18 ஜூன் 2019): பல யூசர் ஐடிக்களை உருவாக்கி ரெயில் டிக்கெட் முன் பதிவு செய்த ப்ரவுசிங் செண்டருக்கு ரூ 5000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

ஐஆர்டிசி இணைய தளத்தில் ஒரு யூசர் ஐடியில் ஒரு மாதத்திற்கு 6 முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தஞ்சையில் உள்ள ஒரு பரவுசிங் செண்டரில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பல ஐடிக்களை போலியாக உருவாக்கி பல டிக்கெட்டுகள் முன் பதிவு செய்தமை தெரிய வந்தது.

இதனை அடுத்து இது தொடர்பாக கார்த்திக் குமார், லாரண்ஸ் ஆகியோரை பிடித்த ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்களுக்கு தலா ரூ 5000 அபராதம் விதித்த நீதிபதிகள் அவர்கள் உபயோகித்த லேப்டா மற்றும் இதர சாதனங்களை பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...