திமுக இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி?

ஜூன் 18, 2019 256

சென்னை (18 ஜூன் 2019): திமுக இளைஞரணி செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அந்த பதவி உதயநிதிக்கு வழங்கப் படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். சில நாள்களுக்கு முன்பு சாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைவரிடம் கொடுத்திருக்கிறார். அதனை ஸ்டாலின் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிகிறது.

உதயநிதிக்கு திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கப் படலாம் என்பதாலும் அதற்காகவே வெள்ளக்கோவில் சாமிநாதன் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...