திமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண்டர்கள் கவலை!

ஜூன் 19, 2019 312

சென்னை (19 ஜூன் 2019): திமுகவின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோவில் காய்ச்சலுக்காக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளான மே 23ம் தேதி சிறுநீரகத் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...