ஆவடிக்கு நகராட்சி அந்தஸ்த்து!

ஜூன் 19, 2019 261

சென்னை (19 ஜூன் 2019): தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இன்று முதல் புதியதாக உதயமாகும் ஆவடி மாநகராட்சியில் ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளும், திருநின்றவூர் பேரூராட்சியும் வரும் என்பது கூடுதல் தகவல்.மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று.

இந்நிலையில், ராணுவ தளவாட ஆலை, ராணுவத்துக்கான ஆடை தயாரிக்கும் ஆலை என பல சிறப்புகளை உள்ளடக்கிய ஆவடி நகராட்சியை மாநகராட்டியாக அறிவிக்கும் படி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நனவாகியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட மொத்தம் 14 மாநகராட்சிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருசில நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டடிருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருந்தனர். இதில் ஆவடி முதல் இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுவாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் குடிநீர், கழிவுநீர் வடிகால், சாலை போன்றவைகளின் கட்டமைப்புகள் தரம் உயரும் அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...