தேசிய கீதத்திற்கு வந்த சோதனை!

ஜூன் 19, 2019 560

சென்னை (19 ஏப் 2019): தமிழ் நாடு பாடபுத்தகத்தில் தேசிய கீதம் தவறாக அச்சடிக்கப் பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை முடிந்து அணைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறன.

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பாக 2ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கணக்கு சூழ்நிலையியல் பாடநூலில் தொகுதி 2ல் உள்ள தேசிய கீதம் தவறாக அச்சடிக்கப் பட்டுள்ளது கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேசிய கீதத்தின் இறுதியில் ஜன கண மங்கள தாயக ஜயஹே என்ற வரி வரும். ஆனால், இந்த புத்தகத்தில், ஜன கண மன அதி நாயக ஜயஹே என தவறுதலுடன் அச்சாகி உள்ளது.

எனவே, இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிழையாக உள்ள தேசிய கீதத்தை மாற்றி பிழையற்ற தேசிய கீதத்தை அச்சிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...