கோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்!

ஜூன் 20, 2019 386

கோவை (20 ஜூன் 2019): கோவை மாவட்டதில், 21 வயது இளம்பெண் ஒருவர் மூளைக் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி அருகே, விநாயகபுரத்தை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா. கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலில் 100 க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், கோவையில் இளம் பெண் பலியான சம்பவத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளதுடன், சுகாதாரதுறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...