தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

ஜூன் 21, 2019 323

சென்னை (21 ஜூன் 2019): வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை விரைவில் உருவாக வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் வெப்பநிலை குறைய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இந்த புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவானால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வெப்பநிலை குறைந்து குளிர்ந்த காற்றுவீசவும் வாய்ப்பு உண்டு.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. அதேபோல, மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதி மாவட்டங்களான ஈரோடு, தேனி, கோவை, நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை இரவு மற்றும் நாளை மாறுநாள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...