விஜய்காந்துக்கு இந்த நிலமையா? - பேரதிர்ச்சியில் தேமுதிகவினர்!

ஜூன் 21, 2019 394

சென்னை (21 ஜூன் 2019): விஜய்காந்தின் சொத்துக்கள் ஏலம் விடப்போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது தேமுதிகவினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரூ.5,52,73,825 கடன், வட்டி மற்றும் இதர பாக்கிகளை வசூலிக்க விஜயகாந்தின் சொத்துகள் ஏலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் விஜயகாந்தின் கண்ணம்மாள் தெரு வீடு இடம் பெற்றுள்ளது. மேலும் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி, சாலிகிராமம் வீடு ஆகியவை ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியின் அறக்கட்டளைக்கு கடனாக பெற்ற தொகைக்கு சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்து உள்ளது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...