சென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து!

ஜூன் 22, 2019 392

சென்னை (22 ஜூன் 2019): சென்னை பிரபல தீம் பார்க்கில் ஏற்பட்ட ராட்டின விபத்தை அடுத்து அங்கு ராட்டினத்தை இயக்க போலீஸ் தடை விதித்துள்ளது.

பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் பொழுதுபோக்குப் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் நீச்சல் குளம், ராட்டினம், டிராகன், ரோப் கார் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

கடந்த 18-ம் தேதி இங்குள்ள "ஃப்ரீ பால் டவர்" என்ற ராட்டினத்தில் ஏராளமானோர் அமர்ந்திருந்தனர். இதில் ஒரு ராட்டினம் மேலிருந்து வேகமாக கீழே இறங்கிய போது, திடீரென இரும்பு வயர்கள் அறுந்ததால் அது கீழே விழுந்தது.

இந்த விபத்தில் 12 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தனியார் பொழுதுபோக்கு பூங்காவை சரியாக பராமரிக்க வேண்டுமென்று காவல்துறை இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், பராமரிப்பு இல்லாத ராட்டினத்தை இயக்குவதற்குத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...