அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அமைக்க கோரிக்கை!

ஜூன் 22, 2019 362

அதிராம்பட்டினம் (22 ஜூன் 2019): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபகாலமாக அதிராம்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சை பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை அது செயல்படுத்தப் படவில்லை.

மேலும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மருத்துவர்கள் உள்ளனர். அதனை அடுத்து செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இரவிலும் மருத்துவர்கள் தங்குவதில்லை. விபத்து ஏற்பட்டு யாரும் அங்கு கொண்டு வரப்பட்டால் பட்டுக்கோட்டைக்கு கொண்டு செல்ல அங்குள்ளவர்கள் உத்தரவிடுகின்றனர். இதனால் விபத்து இறப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.

எனவே இதனை கருத்தில் கொண்டு விரவில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர விபத்து சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப் பட வேண்டும் என அதிராம்பட்டினம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...