பள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி!

ஜூன் 22, 2019 236

சென்னை (22 ஜூன் 2019): போலீசே பள்ளி புத்தக பையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆசிக் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவர் ஒவ்வொரு நாளும் சிசிடிவியை பரிசோதித்துப் பார்ப்பார். அப்படி இருக்கையில், இவரது கடைக்கு கடந்த 19ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், வெளியே அடுக்கி வைத்திருந்த பள்ளி மாணவர்களுக்கான பை ஒன்றை எடுத்துச் சென்று விடுகிறார். இதுவும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ஆசிக், இந்த காட்சியை தனது நண்பர்கள் வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பினார். இந்த வீடியோவை பார்த்த, அவரது நண்பர் ஒருவர் ஆசிக் கடைக்கு வந்து, வீடியோவில் இருப்பது பெயர் வினோத் எனவும், அவர் போலீசாக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து விசாரித்தபோது குடிபோதையில் திருடியதாக ஒப்புக் கொண்ட போலீஸ் வினோத், தான் திருடிச் சென்ற பை-யிற்கான பணத்தை கொடுத்து விட்டார். காவலரே பையை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...