தண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்? - அதிமுகவின் முரண்பாடு!

ஜூன் 25, 2019 325

சென்னை (25 ஜூன் 2019): தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என கூறிய அதிமுகவினர் எதற்கு யாகம் நடத்துகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலாறு காணாத தண்ணீர் வறட்சி தமிழகம் முழுவதும் நிலவி வருகிறது. மக்கள் இரவு பகல் பாராமல் தங்களது அன்றாட வாழ்வின் விருப்பு வெறுப்புகளை மறந்து ஒரு குடம் தண்ணீருக்காக போராடி வருகின்றனர்.

அதேசமயத்தில், ஆட்சியில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ தமிழகத்தில் வறட்சி எல்லாம் இல்லை அப்படிச் சொல்லப்படுவதெல்லாம் வதந்தி எனப் பேசியிருக்கிறார். இவரைவிட முதலமைச்சர் பழனிசாமியோ ஒருபடி மேலே சென்று மக்களுக்கான தண்ணீர் பிரச்னையைப் போக்க முடியாமல் நானே இரண்டு வாளி தண்ணீர்தான் உபயோகிக்கிறேன் எனப் பேசியிருக்கிறார்.

ஆனால் அவர் சொன்னதற்கு நேர் முரணாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேவாலயம், தர்கா, கோவில் என அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று மாங்கு மாங்கென்று தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி வழிபட்டும், யாகம் நடத்தியும் வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...