பாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்!

ஜூன் 26, 2019 657

சென்னை (26 ஜூன் 2019): ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் மதத்தை திணிக்கும் வகையில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மழுப்பலான பதில் அளித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்றாம் மற்றும் 2 ஆம் வகுப்பு புத்தகங்களில் அ என்றால் அகத்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இளம் மாணவர்கள் மனதில் மத கருத்துகளை திணிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தநிலையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாடப்புத்தகங்களை தயாரித்த பேராசிரியர்கள், கல்வியாளர்களின் தவறுதலால் இதுபோன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும், உரிய விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...