அதிமுகவுக்கு பாஜக வைக்கும் செக்!

ஜூன் 27, 2019 394

சென்னை (27 ஜூன் 2019): சசிகலா புஷ்பா மூலம் அதிமுக எம்.பிக்களை வளைக்க பாஜக பலே திட்டம் வகுத்துள்ளது.

தமிழக அரசியலில் அதிரடியாக பரபரப்பை ஏற்படுத்தியவர் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா. தற்போது தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மாநிலங்களவையிலுள்ள அ.தி.மு.க. எம்.பி-க்களை வளைக்கும் பொறுப்பை சசிகலா புஷ்பாவிடம் பா.ஜ.க தலைமை ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களில், நான்கு பேர் சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தனர். இதிலும் இதேபோலதான் பாஜகவின் மூவ் இருந்துள்ளது. ஆக சசிகலா புஷ்பா மூலம் அதிமுகவுக்கு அடுத்த தலைவலி ஆரம்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...