தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

ஜூன் 27, 2019 345

சென்னை (27 ஜூன் 2019): வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...