போலீசாரின் மனித உரிமை மீறல் - போராடி இழப்பீடு வென்ற அதிரை இல்யாஸ்!

ஜூன் 27, 2019 609

அதிராம்பட்டினம் (27 ஜூன் 2019): பொய் வழக்கு மூலம் சித்ரவதைக்கு உள்ளான அதிராம்பட்டினம் இல்யாசுக்கு மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின் பேரில் ரூ 75000 இழப்பீடு வழங்கப் பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் இசட்.முஹம்மது இலியாஸ். எஸ்டிபிஐ மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் 1.4.2013 அன்று அப்போதைய காவல்துறை துணை ஆய்வாளர்கள் திரு. ராஜ் கமல், திரு. ரவிச்சந்திரன் மற்றும் திருமதி முத்துலட்சுமி ஆகியோரால் பொய் வழக்கின் மூலம் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

இந்த சம்பவத்தில் NCHRO தலையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி வழங்கியது. வழக்கறிஞர்கள் எம்.முகமது அப்பாஸ் மற்றும் ஏ.சையது அப்துல் காதர் ஆகியோர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்டவருக்காக வழக்கறிஞர் எச். முஹம்மது இஸ்மாயில் ஆஜரானார். வழக்கின் விசாரணை நடவடிக்கைகள் ஐந்து ஆண்டுகள் நீடித்தன.

இரு தரப்பினரையும் விசாரித்த பின்னர், நீதிபதி பி.ஜெயச்சந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு 26.7.2018 அன்று பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக ரூ.75,000 வழங்க உத்தரவிட்டார்.

அவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி காவலர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து இல்யாசுக்கு ரூ 75000 க்கான காசோலை அளிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...