தினகரனிடமிருந்து விலகிய தங்க தமிழ் செல்வனுக்கு திமுகவில் முக்கிய பதவி?

ஜூன் 28, 2019 492

சென்னை (28 ஜூன் 2019): அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள தங்க தமிழ் செல்வனுக்கு திமுகவில் முக்கிய பதவி அளிக்கப் படலாம் என தெரிகிறது.

அ.ம.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தி.மு.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி. கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார்.

அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என்பதையே தேர்தல் முடிவும் சொன்னது. அதை ஏற்று, நான் திமுகவில் இணைந்துள்ளேன்." என கூறினார்.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து திமுகவில் இணைந்துள்ள தங்க தமிழ் செல்வனுக்கு முக்கிய பதவி வழங்கப் படலாம் என தெரிகிறது. 

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...